பஞ்சாபில் புதிய முதலமைச்சராக முன்னாள் எம்பி. சுனில் ஜாக்கர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு?

0 3316

பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய முதலமைச்சரை இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்ய உள்ளார்.

புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று சண்டிகரில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவுகள் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால், அம்பிகா சோனி உள்ளிட்டோருடன் ராகுல் காந்தியின் வீட்டில் நேற்றிரவு ஆலோசனை நடைபெற்றது.

இதனிடையே அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை முன்னாள் எம்பி. சுனில் ஜாக்கர் பஞ்சாப் முதலமைச்சராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments