திருப்பதியில் ஒரு கோடி ரூபாய் செம்மரம் கடத்திய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் கைது

0 2043

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒரு கோடி ரூபாய் செம்மரம் கடத்திய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கரக்கம்பாடி வனப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது செம்மரங்களை தோளில் சுமந்தபடி கடத்திச் சென்றவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.

சிறுவன் உள்பட 3 பேர் சிக்கிய நிலையில், மற்றவர்கள் தப்பி விட்டனர். இதேபோல் ஹரிதா காலனி பகுதியில் காரில் கடத்திச் சென்ற 10 செம்மரக் கட்டைகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 34 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments