ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேரும் பூமிக்கு திரும்பினர்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளிக்குச் சுற்றுலா சென்ற நான்கு பேரும் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.
அமெரிக்காவின் ‘ஷிப்ட் 4 பேமென்ட்ஸ்' நிறுவனத்தின் தலைவரும் பெரும் கோடீஸ்வரருமான ஜாரிட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர். இந்த பயண திட்டத்துக்கு 'இன்ஸ்பிரேஷன்-4' என பெயரிடப்பட்டிருந்தது. விண்வெளியில் அவர்கள் கடந்த 3 நாட்களாக சுற்றித் திரிந்தனர்.
இந்நிலையில் விண்வெளிச் சுற்றுலா முடிவுற்றதைத் தொடர்ந்து அவர்கள் சென்ற ட்ராகன் கேப்சூல் புளோரிடா பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது.
விண்வெளிக்கு சுற்றுலா சென்று வந்த குழுவினரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலன் மாஸ்க் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
Comments