9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு, தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அமுதவல்லி, செங்கல்பட்டில் சம்பத், வேலூரில் விஜயராஜ் குமார், ராணிப்பேட்டையில் மதுமதி, திருப்பத்தூரில் காமராஜ், விழுப்புரத்தில் பழனிசாமி, கள்ளக்குறிச்சியில் விவேகானந்தன், திருநெல்வேலியில் ஜெயகாந்தன், தென்காசியில் சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளில் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments