அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 4.3 ரிக்டர் அளவில் பதிவான மிதமான நிலநடுக்கம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பூமிக்கடியில் 14 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒரு சில வினாடிகள் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன. கலிபோர்னியா மாகாணத்தில் இரு மாதத்துக்கு ஒரு முறை மிதமான நிலநடுக்கம் ஏற்படும் என்ற போதும், மக்கள் தொகை அதிகம் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஏராளமானோரால் அதை உணர முடிந்தது.
நில அதிர்வால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத போதும், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நகர் முழுதும் வலம் வந்தன.
Comments