கட்டிட பணியின் போது பக்கவாட்டு சுவர், சாரம் சரிந்து விழுந்ததில் பெயிண்டர் ஒருவர் உயிரிழப்பு

0 3284

சென்னை வில்லிவாக்கத்தில் கட்டிட பணியின் போது பக்கவாட்டு சுவர் மற்றும் சாரம் சரிந்து விழுந்ததில் பெயிண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிட்கோ நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின், 2வது தளத்தின் பக்கவாட்டு சுவற்றில் சாரம் கட்டி பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

அப்போது ஒரேநேரத்தில் பக்கவாட்டு சுவரும், பெயின்ட் அடிக்க கட்டப்பட்டிருந்த சாரமும் சரிந்ததில் அதில் இருந்த இரண்டு பெயிண்டர்கள் கீழே விழுந்தனர். அதில் தலையில் பலத்த காயமடைந்த செல்வகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் இரண்டு கால் எலும்புகளும் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments