9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டி?

0 4248

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 20 மாவட்ட நிர்வாகிகளை, அந்த இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பனையூரில் உள்ள அலுவலகத்தில்  சந்தித்துப் பேசியுள்ளார். 

அதில் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என புஸ்ஸி ஆனந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments