ஆளுநர் பதவியேற்பு விழாவில் அரங்கேறிய சுவாரசியமான சம்பவங்கள்

0 5634

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறின. 

புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் முதல் 7 வரிசைகளில் தமிழக அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். அதற்கு அடுத்த 9-வது வரிசையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. 

நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கான இருக்கை எட்டாவது வரிசையில் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் தனக்கான இருக்கையில் அமராமல் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில், அதாவது ஓபிஎசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்து விட்டார்.

இதனை கவனித்த அதிகாரிகள் அவருக்கான இருக்கை 8-வது வரிசையில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்கள். ஆனால் தான் இங்கேயே அமர்ந்து கொள்வதாக எல்.முருகன் கூறிவிட்டார்.

இதனை பின்வரிசையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த திமுக எம்பி கனிமொழி எழுந்து வந்து மத்திய அமைச்சரின் இருக்கையின் அருகில் வந்து முன் வரிசையில் அமர்ந்து கொள்ளலாம் என்றும் தங்களுக்கான இடம் அங்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஆனால் தனக்கு இந்த இடமே சரியாக உள்ளது என்றும் இங்கேயே அமர்ந்து கொள்வதாகவும் கூறிவிட்டார். முன்னதாக அருகில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவிக்கவே, அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.

இதே போல் மேடையில் அதிமுக நிர்வாகிகளை ஆளுநரிடம் அறிமுகம் செய்து வைத்த போது எடப்பாடி பழனிசாமியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments