விழுப்புரம்: ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.14 லட்சத்திற்கு ஏலம்?
விழுப்புரம் மாவட்டம் சித்தேரியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அக்கிராமத்தில் உள்ள ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஏலம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த ஏலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வெள்ளேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சற்குணத்திற்கு 14 லட்சம் ரூபாய்க்கு, பதவி இறுதி செய்யப்பட்டு, அவரையே பொதுமக்கள் ஓட்டுப்போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம இளைஞர்கள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
Comments