வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த சிறுவனை முட்டித் தூக்கிய பசுமாடு
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த சிறுவனை பசுமாடு முட்டித்தூக்கிய நிலையில், சரியான நேரத்திற்கு உறவினர்கள் அங்கு வந்ததால் அந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான்.
அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் ராஜராஜன் தெருவைச் சேர்ந்த தினேஷ் என்பவரது 4 வயது மகன் சரத் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த நிலையில், அந்த வழியாக கன்றுடன் வந்த பசுமாடு மிரண்டு போய் அந்த சிறுவனை முட்டி தூக்கியது. சரியான நேரத்திற்கு அங்கு வந்த சிறுவனின் தந்தை தினேஷ் மற்றும் உறவினர்கள் மாட்டிடம் இருந்து சிறுவனை காப்பாற்றினர்.
அம்பத்தூரில் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான மாடுகள் வீதியில் சுற்றி வருவதாகவும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Comments