மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக: மத்தியப் பிரதேசத்தில் எல்.முருகன் போட்டி
மத்தியத் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்தியக் கப்பல் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் அமைச்சரான சர்வானந்த சோனாவால் அசாமில் இருந்தும், மத்திய இணையமைச்சர் முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவர் எனக் குறிப்பிட்டுள்ளது.
Comments