2வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி வீட்டில் இருந்து மாயம் ; தனிப்படை அமைத்து மாணவியை தேடி வரும் போலீசார்

0 9450
2வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி வீட்டில் இருந்து மாயம் ; தனிப்படை அமைத்து மாணவியை தேடி வரும் போலீசார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி வீட்டில் இருந்து மாயமான நிலையில், போலீசார் தேடி வருகின்றனர். சின்ன அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் பாண்டியன் என்பவரது 19-வயது மகள் ஸ்வேதா கடந்த 2019-ம் ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து கடந்த 12-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் கலந்துகொண்டு இரண்டாவது முறையாக தேர்வு எழுதியுளார். இந்நிலையில், நேற்று காலை ஸ்வேதா வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் நீண்ட நேரமாக தேடி பார்த்தும் கிடைக்காததால், தந்தை நாமகிரிப்பேட்டை காவல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனிப்படை அமைத்து மாணவியை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments