அமெரிக்காவில் 65வயது முதியோர், பாதிப்பு மிக்கவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி, மருந்து கட்டுப்பாட்டு நிபுணர் குழு பரிந்துரை

0 1872

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும் உடல் நல பாதிப்புக்கான ஆபத்தான நிலையில் இருப்போருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிக்கு மேல் மூன்றாவதாக பைசர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிபுணர்க் குழு பரிந்துரை செய்துள்ளது.

முன்களப் பணியாளர்களான சுகாதாரத்துறையினர் மற்றும் ஆசிரியர்களையும் பூஸ்டர் செலுத்துவதற்கு இணைக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே லான்சட் மருத்துவ இதழில் பேராசிரியர் டாக்டர் இரா லோங்கினி என்பவர் பெருவாரியாக பூஸ்டர் செலுத்துவதால் பலன் இருப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று சுட்டிக் காட்டியிருந்தார்.

அறிவியல் பூர்வமான ஆதாரம் கிடைத்த பின் பெருவாரியான மக்களுக்கு பூஸ்டர் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments