கோவாவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய சுகாதாரத் துறையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு

0 1617

கோவாவில் உள்ள சுகாதாரத் துறையினருடன் இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார்.

100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய இலக்கை அடைந்ததற்கு சுகாதாரத் துறையினருக்கு மோடி பாராட்டு தெரிவிக்க உள்ளார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயனாளிகளுடனும் மோடி உரையாடுவார். இந்த நிகழ்ச்சியில் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தடுப்பூசி இயக்கத்தை துரிதப்படுத்துவதிலும் புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களை கையாண்ட விதத்திலும் கோவா அரசு சிறந்த நிர்வாகத்திறமையை வெளிப்படுத்தியிருப்பதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments