மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியுடன் சேர்ந்து தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்ட வழக்கு ; மன்னார்குடி இளைஞர் கைது
மும்பை நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளுடன் சேர்ந்து தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இளைஞரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்...
மதுரையை சேர்ந்த முகம்மது இக்பால் என்பவர் அவரது சமூக வலைதள பக்கங்கள் மூலம் தேச இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பிற மத, சமூகம் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டமைக்காக அவர் மீது மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
முகமது இக்பாலுடன் தொடர்புடைய பாவா பக்ருதீன் என்ற மன்னை பாவா என்பவரும் பல்வேறு வலைதள கணக்குகளின் மூலம் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை பரப்பி தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு மன்னை பாவா குறித்து திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகின்றது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இபராஹிமின் கூட்டாளிகள் சிலருடன் இணையவழி தொடர்பில் இருந்து கொண்டு தேச ஒற்றுமையை குலைக்க சதி திட்டம் தீட்டி வருவதாக தகவல் கிடைக்கப்பெற்றதன் தொடர்ச்சியாக மன்னார்குடியில் ஆசாத் தெருவில் உள்ள மன்னை பாவா பக்ரூதினின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்த 10 க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அதனை தொடர்ந்து பாவாபக்ருதீனை கைது செய்ததோடு அவரது மடிக்கணினி, பிரிண்டர், செல்போன் உள்ளிட்டவற்றையும் 30 புத்தகங்களையும் கைப்பற்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments