தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராகவும், நாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராகவும் மாற்றப்பட்டனர்.
நேற்று முன்தினம் சென்னை வந்த ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். இந்நிலையில், கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, புதிய ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளால், மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1976 ம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கிய ஆர்.என்.ரவி, மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி 2012 ல் ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராக நியமிக்கப்படும் வரையில், நாகலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி வகித்தார்.
Comments