யூடியூப் வீடியோக்களால் மாதம் ரூ.4 லட்சம் வருமானம்... மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தகவல்

0 5003

யூடியுப்பில் தாம் பதிவேற்றிய வீடியோக்கள் மூலம் மாதம் 4 லட்சம் ரூபாய் தனக்கு கிடைப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

டெல்லி -  மும்பை எக்ஸ்பிரஸ்வே திட்டத்தை ஆய்வு செய்த போது பேசிய அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் 2 வேலைளை தாம் செய்ததாக குறிப்பிட்டார். சமையல் கலைஞராக மாறி வீட்டில் சமைக்க தொடங்கியதை அவர் நினைவுகூர்ந்தார். அதேபோன்று ஆன்லைன் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் 950க்கும் மேற்பட்ட விரிவுரையாற்றியதாக கூறினார்.

அந்த வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததன் வாயிலாக, தனக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ராயல்டியாக கிடைப்பதாக கட்காரி தெரிவித்தார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments