சாதாரண வாடிக்கையாளர்களுக்கு விண்ணில் மிதப்பதை போன்ற அனுபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம்

0 3030

அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் விண்வெளி வீரர்கள் விண்ணில் மிதப்பதை போன்ற ஒரு அனுபவத்தை சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

Zero G Corporation என்னும் நிறுவனம் இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட போயிங் 727 விமானத்தில்  வாடிக்கையாளர்களை ஏற்றி, பூமியிலிருந்து சுமார் 24 ஆயிரம் அடி உயரத்துக்கு செல்கிறது. அங்கு விமான பைலட், zero gravity parabolic flight என்று அழைக்கப்படும் ஒரு வகையான விமானம் ஓட்டும் முறையை மேற்கொள்வார். அதாவது 24 ஆயிரம் அடி உயரத்துக்கு சற்று மேல் விமானத்தை செலுத்தும் போது புவியீர்ப்பு விசை இல்லாமல் காற்றில் மிதப்பது போன்ற உணர்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தும்.

20 முதல் 30 நொடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு மீண்டும் விமானம் 24 ஆயிரம் அடி உயரத்துக்கு திரும்பும். 90 நிமட பயணத்தில் சுமார் 15 முறை இதை விமானி செய்யும்போது பயணிகளுக்கு விண்ணில் மேலும் கீழும் இழுக்கப்படுவதை போல தோன்றும் . இந்த பயணத்துக்கு அந்நிறுவனம் நபர் ஒருவருக்கு 7 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் வசூலிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments