கேரளத்தில் 11ஆம் வகுப்புத் தேர்வு நடத்துவதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

0 2515

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுநடத்தும் கேரள அரசின் முடிவை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கேரளத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் ஆறாம் நாள் முதல் தேர்வை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருந்தது. கொரோனா சூழலில் தேர்வு நடத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்வு நடத்த ஒருவாரக் காலத்துக்குத் தடை விதித்தனர்.

ஏற்கெனவே பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு, நுழைவுத் தேர்வு ஆகியவற்றைப் பாதுகாப்பாக நடத்தியுள்ளதாகத் தெரிவித்த மாநில அரசு, கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும் என உறுதியளித்தது. இணையவழித் தேர்வுக்கான கட்டமைப்புகள் பல மாணவர்களிடம் இல்லை எனவும் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தேர்வு நடத்துவதை எதிர்த்த மனுவைத் தள்ளுபடி செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments