சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 செயற்கைகோள்... அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட வாய்ப்பு
இந்தியாவில் இருந்து முதன் முறையாக சூரியனை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட உள்ள ஆதித்யா எல் 1 செயற்கைகோள் அடுத்த ஆண்டு 3வது காலாண்டில் செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பிரபஞ்சம் தோன்றியது எப்படி போன்ற பல தெரியாத தகவல்களை அறிந்து கொள்ள இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தில் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு விண்கலம் அனுப்பப்பட உள்ளது.
காஸ்மிக் எக்ஸ் கதிர்களை ஆராய்வதற்காக எக்ஸ்போசட் என்ற செயற்கைகோளும், சிறியரக ராக்கெட்டில் வைத்து அடுத்த ஆண்டு அனுப்பப்பட இருப்பதாகவும், அதற்கான ராக்கெட்டை 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments