முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

0 4244

ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது என்றும் எனவே செல்லூர் ராஜு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அண்ணா மாளிகையில் நடைபெற்றது. 

“ஸ்மார்ட் சிட்டி பணிகளில் முறைகேடு நடைபெற்று இருந்தால் நிரூபிக்கவும்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொன்ன கருத்துக்கு பதிலளித்தவர், "கொஞ்சம் அறிவு இருப்பவர்கள் இப்படி சவால் விட மாட்டார்கள்” என காட்டமாக விமர்சித்தார்.

முன்னதாக சு.வெங்கடேசன் எம்.பி. அளித்த பேட்டியில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டுவதற்கு பிளானிங் கமிஷன் அனுமதியே வாங்கவில்லை என்றும், வடிவேல் காமெடி போல ஒரு பேருந்து நிலையத்தையே காணவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments