காவல் நிலைய பெயர் பலகைகளில் விளம்பரதாரரின் பெயர்களை நீக்க டிஜிபி உத்தரவு

0 3926

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் வைக்கப்படும் பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள விளம்பரதாரரின் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து நன்கொடை வழங்கி காவல் நிலையங்களில் வைக்கும் பெயர் பலகைகளில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன பெயர்களும் பொறிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவல் நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றுள்ளதால் மக்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படுகிறது.

எனவே, தனியார் நிறுவன பெயர்கள் பொறிக்கப்பட்ட காவல் நிலைய பெயர் பலகைகளை உடனடியாக அகற்றி புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.  மேலும், புதிதாக பெயர் பலகை வைக்க காவல் நிலைய முன்பணத்தை செலவிட்டு கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments