2 நாளில் ரூ.1100 கோடியைத் தாண்டிய ஓலா மின்சார ஸ்கூட்டர் விற்பனை

0 5096

கடந்த இரு நாட்களில் ஓலா மின்சார ஸ்கூட்டர் விற்பனை ஆயிரத்து நூறு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

ஓலா நிறுவனம் எஸ் 1 வகை ஸ்கூட்டருக்கு ஒரு இலட்ச ரூபாயும், எஸ் 1 புரோ வகை ஸ்கூட்டருக்கு ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாயும் விலை நிர்ணயித்துள்ளது.

செப்டம்பர் 15, 16 ஆகிய இரு நாட்கள் மட்டும் ஆன்லைன் வழியாக விற்பனை ஆயிரத்து நூறு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது.

முதல் நாளில் மட்டும் 600 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாகவும் ஓலா தெரிவித்துள்ளது. இணையவழியில் வாங்கியோருக்கு அக்டோபரில் ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக நவம்பர் முதல் நாளில் ஆன்லைன் விற்பனை நடைபெறும் என ஓலா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments