பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டுவர 77 சதவீதம் பேர் விருப்பம் - ஆன்லைன் சர்வேயில் தகவல்
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரிமுறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என 77 சதவீதம் பேர் விரும்புவதாக, ஒரு ஆன்லைன் சர்வே தெரிவிக்கிறது.
தற்போது பெட்ரோல், டீசல் மத்திய-மாநில வரி விதிப்பு வரம்புகளின் கீழ் உள்ளது. இதை ஜிஎஸ்டி என்ற ஒரே வரிமுறையின் கீழ் கொண்டுவருவதால், 28 சதவீதம் அளவுக்கு வரி விதித்தால் கூட, லிட்டர் 75 ரூபாய்க்குள் வரும் என கருதுவதால், 77 சதவீதம் பேர் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, LocalCircles என்ற சமூக வலைத்தளம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 379 மாவட்டங்களில் 7 ஆயிரத்து 500 பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 11 சதவீதம் பேர், ஜிஎஸ்டி முறையின் கீழ் கொண்டுவரக் கூடாது என்றும், 12 சதவீதம் பேர் எதுவும் கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளதாக LocalCircles சமூக வலைத்தளம் கூறியுள்ளது.
Comments