வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற சிரோமணி அகாலிதளம் கோரிக்கை: நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த அனுமதி மறுப்பு, காவல்படையினர் குவிப்பு
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி சிரோமணி அகாலிதளம் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு அனுமதி மறுத்துக் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி சிரோமணி அகாலிதளம் சார்பில் இன்று டெல்லி ரகப்கஞ்ச் குருத்துவாராவில் இருந்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்துவதாக அறிவித்தனர்.
கொரோனா தடுப்பு விதிகளைக் காரணம் காட்டி அதற்கு அனுமதிக்காத காவல்துறை 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
பேரணி செல்வதாக அறிவித்த பாதைகளில் தடுப்பரண்கள் அமைத்துள்ளதுடன் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பாதையில் உள்ள மெட்ரோ ரயில்நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பேரணிக்காக ரகப்கஞ்ச் குருத்துவாரா முன் திரண்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சு நடத்தினர்
Comments