ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் இளவரசர் பிலிப்ஸ் எழுதிய உயில் ; வெளி உலகிற்கு தெரியாதபடி 90 ஆண்டுகளுக்கு சீலிட்டு பாதுகாக்க உத்தரவு

0 9465
வெளி உலகிற்கு தெரியாதபடி 90 ஆண்டுகளுக்கு சீலிட்டு பாதுகாக்க உத்தரவு

ப்ரிட்டன் ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் இளவரசர் பிலிப்ஸ் எழுதி வைத்து சென்ற உயில் 90 ஆண்டுகளுக்கு வெளி உலகிற்கு தெரியாதபடி பாதுகாக்கப்பட வேண்டும் என லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச குடும்பத்தின் கண்ணியத்தை காக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி Andrew McFarlane தெரிவித்தார்.

1910 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் நடைமுறைபடி, இறந்த அரச குடும்ப உறுப்பினர்களின் உயில்கள் நகல் எடுக்கப்படுவதும் இல்லை, நீதிமன்றத்தில் ஆவணமாக வைக்கப்படுவதும் இல்லை என்பதால், மறைந்த இளவரசர் பிலிப்ஸ்-ன் உயிலும் சீலிடப்பட்டு தனிப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்க நீதிபதி உத்திரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments