அரசு மருத்துவமனை விடுதியில் எம்.பி.பி.எஸ் பயின்ற ரஞ்சித் குமார் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை

0 5453

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ் பயின்ற,   ரஞ்சித் குமார் என்ற மாணவர், அரசு மருத்துவமனை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மாணவர் ரஞ்சித் குமார் 5 ஆண்டு படிப்பை நிறைவை செய்துவிட்டாலும் அரியர் இருந்ததாகவும், சகமாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு மருத்துவராகப் பணியாற்றும் நிலையில், தான் இன்னும் படிப்பை முடிக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காதல் தோல்வியும் ரஞ்சித்குமார் விபரீத முடிவை எடுத்ததற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments