இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றம்: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 423 புள்ளிகள் உயர்வு
இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த மத்திய அரசு காலநீட்டிப்பு அளித்துள்ளது.
இதன் எதிரொலியாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்து பங்குச்சந்தை ஏற்றமடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஒன்பதே முக்கால் மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 423 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 565 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தையில் பங்குவிலைக் குறியீடு நிப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 723ஆக இருந்தது. வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்கு விலை 3 விழுக்காடு வரை உயர்ந்தது.
Comments