புதிதாகக் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து ; 14 பேர் படுகாயம்
மும்பையில் புதிதாகக் கட்டப்பட்ட பாலத்தின் ஒருபகுதி சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 14 பேர் காயமடைந்தனர். மும்பையில் பாந்த்ரா குர்லா வளாகம் - செம்பூர் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இரும்பாலான தாங்கிகளைக் கொடுத்துப் பாலத்தைக் கட்டித் தூண்களின் மீது பொருத்தும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை நாலரை மணியளவில் பாரம் தாங்காமல் பாலத்தின் ஒரு பகுதி விழுந்தது.
இதில் இரும்புத் தாங்கிகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
Comments