தெருக்களே பள்ளிகள், சுவர்களே கரும்பலகைகள்: கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வியைத் தொடர ஆசிரியரின் அரிய சேவை
கடந்த ஆண்டு கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மேற்குவங்கத்தின் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஜோபா அட்பரா என்ற சிறிய கிராமத்தில் சாலைகளையே பள்ளிச்சாலைகளாக மாற்றி சுவர்களை கரும்பலகைகளாக்கி, ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.
தீப் நாராயண் நாயக் என்ற அந்த ஆசிரியர் பள்ளிப் பாடங்களுடன் கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிவது சுத்தம் பேணுவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற சமூக பாடங்களையும் மாணவர்களுக்குக் கற்றுத் தந்தார்.
கிராமப்புற மாணவர்கள் கல்வியை இழப்பதைத் தவிர்க்கவும் ஆடு மாடு மேய்க்கப் போவதைத் தடுக்கவும் தாம் இப்பணியை மேற்கொண்டதாக கூறுகிறார் இந்த ஆசிரியர்.
Comments