உக்ரைன்னில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கால் தயாரான ராட்சத திமிங்கலம்
உக்ரைன் தலைநகர் கிவ்-வில், மறுசுழற்சி பிளாஸ்டிக் கொண்டு செய்யப்பட்ட ராட்சத திமிங்கலம் பொது மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
சுற்றுச்சுழல் மாற்றம், பருவநிலை தவறுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பிய சிற்பி ஒருவர் மறுசுழற்சி பிளாஸ்டிக்கால் 750 கிலோ எடை கொண்ட ராட்சத திமிங்கலத்தை உருவாக்கினார்.
மாணவர்கள் உள்பட ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் நதி, பூங்கா உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரித்த பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து திமிங்கலம் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments