5 மாநிலங்களில் பரவிய டெங்கு காய்ச்சல் ; மத்தியப் பிரதேசத்தில் அதிகளவிலான பாதிப்பு
வடமாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவருவதன் காரணமாக கடந்த இரு வாரங்களில் குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் , பீகார், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் நோயாளிகளும் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 3000 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
Comments