கோஸ்டா ரிக்காவின் 200வது சுதந்திர தின விழா ; டிரோன்கள் உதவியுடன் இரவில் வானில் வண்ணமிகு கொண்டாட்டம்

0 1876
500டிரோன்கள் உதவியுடன் இரவில் வானில் வண்ணமிகு கொண்டாட்டம்

Costa Rica நாட்டின் 200வது சுதந்திர தினம் டிரோன்களின் உதவியுடன் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஸ்பெயினில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பு Costa Rica சுதந்திரம் பெற்றது.

இதைக் கொண்டாடும் வகையில் அந்நாட்டில் உள்ள San Jose's தேசிய மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரவில் வானில் வண்ணவிளக்குகளாய் ஒளிரும் வகையில் 500டிரோன்களின் உதவியுடன் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

மேலும் வாணவேடிக்கைகளும் நடைபெற்றன. இதனை மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.கொரோனாவில் உயிரிழந்த சுகாதார ஊழியர்களுக்கும் டிரோன்கள் மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments