பெட்ரோல் பங்கில் ரூ.1.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ; திருப்பூரில் பதுங்கி இருந்த 3 கொள்ளையர்கள் கைது

0 2081
பெட்ரோல் பங்கில் ரூ.1.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ; திருப்பூரில் பதுங்கி இருந்த 3 கொள்ளையர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பர்தா அணிந்து வந்து பெட்ரோல் பங்கில் ஒரு லட்சத்து 70ஆயிரம் ரூபாயை பட்டாக்கத்தி முனையில் கொள்ளை அடித்த 3பேர் கைது செய்யப்பட்டனர். மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 9ந்தேதி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததை அடுத்து அங்கு சென்று 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments