ஷாங்காய் மாநாட்டில், லடாக் எல்லையில் படைக்குறைப்பு குறித்து சீன அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
தஜிகிஸ்தானில் நடைபெற்றுவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு சென்றுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், லடாக் எல்லையில் படை குறைப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாகிஸ்தான் மற்றும் தாலிபன்கள் குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. சுமுகமான முறையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், எல்லையில் அமைதி நிலவுதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் ஜெய்சங்கர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Comments