தஜிகிஸ்தான் தலைநகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று பிரதமர் மோடி உரை
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளார் .தீவிரவாதம், கோவிட், வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளுடன் ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சி குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஜிகிஸ்தானில் நேற்று தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சீனா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆப்கான் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், தாலிபன் அரசுக்கும் பாகிஸ்தானுக்கும் அதன் தீவிரவாத இயக்கங்களுக்கும் உள்ள தொடர்புகள் கவலையளிப்பதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments