கடந்த 6 நிதியாண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 1739

வாராக்கடன் பிரச்னையை தீர்க்க தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு மத்திய அரசு 30 ஆயிரத்து 600 கோடி ரூபாய் உத்தரவாதம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

கடந்த 6 நிதியாண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ம் ஆண்டில் 21 பொதுத்துறை வங்கிகளில் 2 வங்கிகள் மட்டுமே லாபத்தில் இயங்கியதாகவும், தற்போது 2 வங்கிகள் மட்டுமே நஷ்டத்தை சந்தித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments