பிரதமர் மோடிக்கு இன்று 71 வது பிறந்தநாள் ; வாரணாசியில் 71 தீபங்களை ஏற்றி பிரதமருக்காக பிரார்த்தனை
பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வாரணாசி மக்களவைத் தொகுதியில், மோடியின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு இரவில் 71 தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
பிரதமரின் பிறந்தநாளுக்காக 71 கிலோ எடை கொண்ட விசேஷமான லட்டு தயாரிக்கப்பட்டது. போபாலில் 71 அடி நீள தடுப்பூசி வடிவிலான கேக்கை வெட்டி பா.ஜ.க.வினர் பிரதமரின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
மோடி பிறந்தநாளை சேவா திவஸ் என்ற பெயரில் கொண்டாடிவரும் பா.ஜ.க.வினர், இந்தாண்டு அதிகளவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், மற்றவர்கள் தடுப்பூசி போட உதவுமாறும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments