டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை
டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், அந்த உத்தரவு நாடு முழுவதற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
மத்திய அரசு கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனக் கூறிய நீதிபதிகள், அந்த பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் கடைசி வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
Comments