ஆஸ்திரேலியா முதுகில் குத்திவிட்டது; நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது - பிரான்ஸ்

0 6917
ஆஸ்திரேலியா முதுகில் குத்திவிட்டது; நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது - பிரான்ஸ்

அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வாங்க அமெரிக்காவுடன் உடன்பாடு செய்துகொண்ட ஆஸ்திரேலியா தங்களை முதுகில் குத்திவிட்டதாகவும், நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பிரான்சின் நேவல் குழுமத்திடம் இருந்து இரண்டு இலட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், அணு ஆற்றலால் இயங்கும் 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க 2016ஆம் ஆண்டில் இருந்தே ஆஸ்திரேலியா பேச்சு நடத்தி வந்தது. இந்நிலையில் புதனன்று ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய, பிரிட்டன் பிரதமர்கள் கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டனர்.

அதன்படி அமெரிக்காவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்க உள்ளது. இது குறித்துப் பேசிய பிரெஞ்ச் வெளியுறவு அமைச்சர் ஜீன் யேஸ் லீ டிரையன், தனக்கு ஆத்திரமும் கசப்புணர்வும் தோன்றுவதாகவும், பைடனின் இந்தச் செயல் டிரம்பின் செயலை நினைவூட்டும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments