பள்ளி மாணவிகள் 23 பேருக்கு பாலியல் தொல்லை ; கணித ஆசிரியர் கைது
கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 23 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கணித ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அந்த பள்ளியில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர் சேகர், பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் வந்து பள்ளி நிர்வாகத்திடம் ஆசிரியர் மீது புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம், எஸ்.பி ரவளிபிரியாவிடம், ஆசிரியர் சேகர் மீது புகார் அளித்தனர். எஸ்பி உத்தரவிட்டதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஆசிரியர் சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற புகாரில் சிக்கி அவர் சஸ்பெண்ட் ஆகி இருந்தார். கும்பகோணத்தில் 150 ஆண்டுகள் பழமையான நகர மேல்நிலைப் பள்ளியானது கணிதமேதை ராமானுஜம் உள்ளிட்ட பல்வேறு உலகப்புகழ்பெற்ற அறிஞர்கள் படித்த பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments