அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் நியூசிலாந்து எல்லைக்குள் அனுமதி இல்லை - ஜஸிந்தா ஆடர்ன்
ஆஸ்திரேலியாவின் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் நியூசிலாந்து கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி இல்லை என்று பிரதமர் ஜஸிந்தா ஆடர்ன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உதவியுடன் அணுசக்தி மூலம் இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை நியுசிலாந்தின் நெருங்கிய நட்பு நாடான ஆஸ்திரேலியா மேற்கொள்கிறது.
அணுசக்தி சார்ந்த கப்பல்கள் அதன் கடல் எல்லைக்குள் நுழைய 1985 ஆண்டு முதல் நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ள நிலையில், அவற்றுக்கான தடை தொடரும் என பிரதமர் ஜஸிந்தா ஆடர்ன் கூறுயுள்ளார்.
Comments