முதலமைச்சர் பூபேந்திர பட்டேலை அடுத்து, குஜராத்தில் 24 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்

0 2556

குஜராத்தில் 24 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களில் 10 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், 14 பேருக்கு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

காந்திநகர் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய அமைச்சரவையில், ஏற்கனவே விஜய் ரூபானி அமைச்சரவையில் இருந்த யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments