கடலுக்கு அடியில் 3,900 மைல் நீளமுள்ள கேபிள் போடும் பணியை நிறைவு செய்தது கூகுள் நிறுவனம்
நியூ யார்க்கில் இருந்து பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் வரை, கடலுக்கு அடியில், 3 ஆயிரத்து 900 மைல் நீளமுள்ள கிரேஸ் ஹோப்பர் இன்டர்நெட் கேபிள் போடும் பணியை கூகுள் நிறுவனம் நிறைவு செய்துள்ளது.
நியூயார்க்கில் இருந்து துவங்கும் இந்த கேபிளின் மறு முனை பிரிட்டனின் மேற்கு கடற்கரையான கார்ன்வெல்லில் தரையை தொட்டது. ஜூலை மாதம் நிறைவடைய வேண்டிய இந்த பணி சற்று தாமதமாகி உள்ளது, கேபிளின் மற்றொரு முனை ஏற்கனவே ஸ்பெயினின் பில்பாவோ நகரில் கரையை தொட்டுள்ளது.
இந்த கேபிள் போடும் திட்டத்தை கடந்த 2020 ல் கூகுள் அறிவித்தது. இதனால் வினாடிக்கு 340 முதல் 350 டெராபைட்ஸ் டேட்டாக்களை கொண்டு செல்ல முடியும்.
அதாவது, சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர் ஒரே நேரத்தில் 4K வீடியோவை காண்பதற்கான டேட்டா பரிமாற்றம் நடக்கும்.
Comments