நடிகர் சோனு சூட் இல்லத்தில் இன்று வருமான வரித்துறை ஆய்வு

0 2942

மும்பையில் நடிகர் சோனு சூட்டின் அலுவலகம் உட்பட 6 இடங்களில் நேற்று ஆய்வு நடத்திய வருமான வரித்துறையினர் இன்று அவரது வீட்டில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

சோனு சூட்டின் நிறுவனத்துக்கும் லக்னோவைச் சேர்ந்த நில வணிக நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற சொத்து விற்பனை தொடர்பாக இந்த ஆய்வு நடைபெறுகிறது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை சோனு சூட் சந்தித்தது, அவரைப் பள்ளி மாணவர்களுக்கான தூதராக டெல்லி அரசு நியமித்தது, அவர் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடும் எனக் கருதப்படுவது இத்தகைய பின்னணியில் வருமான வரிச் சோதனை நடைபெறுவது குறிப்பிடத் தக்கது.

வருமான வரிச் சோதனைக்கு அரசியல் பின்னணி ஏதும் கிடையாது என பாஜக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments