ஊரடங்கில் தொடங்கிய விவசாயத் தொழில்... காய்கறி விற்பனையில் கல்லா கட்டும் பட்டதாரி பெண்
கோயம்புத்தூர் மாவட்டம் கக்கடவு கிராமத்தில் ஊரடங்கில் பொழுதுபோக்கிற்கு விவசாயம் பார்க்க தொடங்கிய பட்டதாரிப் பெண், நாளொன்றுக்கு ஒரு டன் அளவிற்கு காய்கறி விளைவித்து கல்லா கட்டி வருகிறார்.
பி.டெக். பட்டதாரியான காவியா ஊரடங்கில் தன் தரிசு நிலத்தில் இயற்கை உரங்களை போட்டு காய்கறி பயிரிட்டுள்ளார். சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட நவீன தொழில்முறையை விவசாயத்தில் புகுத்தி நல்ல விளைச்சல் கண்டுள்ளதாக காவியா தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 1 டன் அளவில் காய்கறி விளைவித்து வருவாய் ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
Comments