கோவை சரவணம்பட்டி அருகே தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 3163

கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சரவணம்பட்டி அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவர்கள் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கொரோனா முகாமில் அனுமதிக்கப்பட்டனர். நர்சிங் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே வளாகத்தில் இயங்கி வரும் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments