தோற்றுப் போன அரசாக உள்ள பாகிஸ்தானிடம் பாடம் கற்க வேண்டிய நிலையில் இந்தியா இல்லை - ஐநா.வில் இந்தியா திட்டவட்டம்
ஸ்திரத்தன்மை இல்லாத , தோற்றுப் போன அரசாக உள்ள பாகிஸ்தானிடம் பாடம் கற்க வேண்டிய நிலையில் இல்லை என்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா.மனித உரிமைக் கவுன்சிலின் 48 வது கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் குறித்து இந்தியா மீது பாகிஸ்தான் சர்வதேச அரங்கில் 57 நாடுகளைக் கொண்ட மனித உரிமைக் கவுன்சிலில் அவதூறுப் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
தீவிரவாதத்தின் புகலிடமாகவும் மிக அதிக அளவில் மனித உரிமைகள் நசுக்கப்படும் நாடாகவும் பாகிஸ்தான் இருப்பதாக மனித உரிமைக் குழுவின் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி பவன் பாதே தமது உரையில் குறிப்பிட்டார்.
Comments