குஜராத்தில் இன்று 27 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
குஜராத்தில் 27 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். விஜய் ரூபானி ராஜினாமா செய்ததையடுத்து அம்மாநில முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் பதவியேற்றார்.
புதிய அமைச்சர்கள் யார் என்ற தேர்வில் இழுபறி ஏற்பட்டதால், அமைச்சர்கள் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே இருந்த எல்லா அமைச்சர்களும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சரவையில் இரண்டு அல்லது மூன்று பெண்களும் இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments