நடிகர் சோனு சூட் சம்பந்தப்பட்ட 6 இடங்களில் ஐ.டி அதிகாரிகள் சோதனை

0 3021
நடிகர் சோனு சூட் சம்பந்தப்பட்ட 6 இடங்களில் ஐ.டி அதிகாரிகள் சோதனை

மும்பையில், பாலிவுட் நடிகர் சோனு சூட் தொடர்பான 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கொரோனா ஊரடங்கின் போது ஏராளமானோர் சொந்த ஊருக்குத் திரும்ப உதவிய நடிகர் சோனு சூட்டை டெல்லி அரசு, பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் திட்டத்துக்கான விளம்பர தூதராக நியமித்தது.

அடுத்தாண்டு நடைபெற உள்ள பஞ்சாப் தேர்தலில் சோனு சூட் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவர் சம்பந்தப்பட்ட 6 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதற்கு சிவ சேனா மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments